குழந்தைகளின் மூளை சுறுசுறுப்பாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் அவசியம். இன்றைய காலகட்டத்தில் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதன் மூலம் குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்சனைகள் வருகிறது அதிலிருந்து தவிர்க்கவும் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சூரியகாந்தி விதைகள் சாப்பிடுவது மிகவும் முக்கியம் இது மட்டுமில்லாமல் சணல் விதை மற்றும் பூசணி விதைகளையும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
மேலும் ஆளி விதைகள் மற்றும் சியா விதைகள் குழந்தைகளின் மூளை ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வகிக்கிறது.
எனவே குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு ஆரோக்கியமான உணவு பொருட்களை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம்.