சரும பொலிவிற்கு சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள பெரும்பாலானோர் கிரீம்களையும் ,ஃபேஸ் வாஷ் களையும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது சிலருக்கு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். ஆனால் ஆரோக்கியமான முறையில் சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்வது மட்டுமில்லாமல் முகப்பருவை சரி செய்ய சர்க்கரை வள்ளி கிழங்கு பயன்படுத்தலாம். இது மட்டும் இல்லாமல் தயிர் மற்றும் வெள்ளரிக்காய் சருமப்பொலிவிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக நீரேற்றம் ஆக வைத்திருக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் சிப்பி சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மட்டுமில்லாமல் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவும்.
எனவே எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் சருமத்தை பொலிவாக வைத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழலாம்.