ரத்தம் சுத்தம் செய்யும் உணவுகள் குறித்து பார்க்கலாம்.
உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது. ஆரோக்கியமான உணவு முறையும் ஒரு காரணம். உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்த ரத்த சுத்திகரிப்பு மிகவும் அவசியமானது.
மேலும் சிறுநீரகம், இதயம், கல்லீரல், நுரையீரல் செயல்பாடுகளுக்கு ரத்தத்தின் தூய்மை மிக முக்கியம். எனவே ரத்தத்தை சுத்தம் செய்யும் சில உணவுகள் குறித்து பார்க்கலாம்.
உணவில் பச்சை காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது அது ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.
மேலும் அவகேடோ பழத்தில் இருக்கும் வைட்டமின் ஈ ரத்த நாளங்களை சேதப்படுத்தும் நச்சுக்களை வெளியேற்றுவது மட்டும் இல்லாமல் சருமத்தை சேதப்படுத்தாமல் பாதுகாக்க உதவுகிறது.
குறிப்பாக ப்ரோக்கோலி ரத்தத்தை சுத்தப்படுத்த ஒரு சிறந்த உணவாக இருக்கிறது ஏனெனில் இதில் வைட்டமின் சி பொட்டாசியம் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலின் நச்சுக்களை வெளியேற்றி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பது மட்டுமில்லாமல் ரத்தத்தை சுத்தப்படுத்துவதற்கும் ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது.