மூளை திறனை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று மூளை. அது சுறுசுறுப்பாக இருக்கும் போது உடலும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் மூளை மந்தமானால் அதற்கு காரணம் உணவாகவும் இருக்கலாம். எனவே மூளையை சுறுசுறுப்பாகும் உணவுகள் குறித்து பார்க்கலாம்.
முதலாவதாக சாப்பிட வேண்டியது வால்நட். இது நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் பாஸ்பரஸ், செலினியம், கால்சியம், துத்தநாகம் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முட்டையை சாப்பிடுவது நல்லது.
குறிப்பாக உணவில் காய்கறிகளை அதிகமாக சேர்த்து சாப்பிடுவது முக்கியம். அசைவ உணவுகளில் மீன் அதிகமாக சாப்பிட்டால் நல்லது.
எனவே மந்தமான மூளையை சுறுசுறுப்பாக இது போன்ற உணவுகளை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.