உடல் சூட்டை தணிக்க கூடிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே உடலில் நீர் சத்து குறையும் போது உடல் பலவீனமாக இருக்கும். மேலும் உடல் சூட்டையும் ஏற்படுத்திவிடும். ஆனால் சில உணவுகளை சாப்பிடும் போது உடல் சூட்டை தணித்து உடலை குளிர்ச்சியாக்குவது மட்டுமில்லாமல் நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது அதைக் குறித்து பார்க்கலாம்.
முதலாவதாக சாப்பிட வேண்டியது மோர். இது உடல் சூட்டை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக நீர்ச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்றாக இருப்பது தர்பூசணி. உடல் சூட்டை தணிப்பது மட்டுமில்லாமல் சருமத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் இயற்கை பானங்களில் ஒன்றான இளநீர் குடிக்கும் போது அது உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பது மட்டுமில்லாமல் ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடல் சூட்டை தணிக்கிறது.
எனவே உடல் சூட்டை தணித்து உடலை குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் வைத்துக்கொள்ள இதுபோன்ற உணவுகளை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.