எலும்புகளை வலுப்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் உடலின் ஆரோக்கியத்தில் பங்கெடுத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. இது மட்டும் இல்லாமல் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பது நம் கடமையாகும். அப்படி உடலில் முக்கியத்துவமான ஒன்றான எலும்புகள் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாம் சில உணவுகள் சாப்பிடலாம் அதனை குறித்து பார்க்கலாம்.
எலும்புகள் வலுப்பெற நட்ஸ் வகைகள் மற்றும் கீரை வகை உணவுகளை அதிகமாக சாப்பிடுவது நல்லது.
இது மட்டும் இல்லாமல் சோயா பால், சோயா விதை சாப்பிடுவதன் மூலம் அதில் இருக்கும் புரதம் கால்சியம் எலும்புகளை வலுவாக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
குறிப்பாக மீன்கள் எலும்புகளுக்கு வலுவை கொடுக்கிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.