Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆஸ்கார் விருது யார் யாருக்கு வழங்கப்பட்டது? லிஸ்ட் இதோ

Full list of 2022 Oscar winners

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

உலகமே உற்றுநோக்கும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியது.அதன்படி, 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது,லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் நடைபெறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவானது, இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெறுகிறது.

ஆஸ்கர் விருது விழா கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர், ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். ஆஸ்கர் விருது விழாவை மூன்று பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை.

2022 ஆஸ்கர் விருது பெற்றவர்களின் முழு பட்டியல்:

சிறந்த திரைப்படம் – கோடா

சிறந்த நடிகர் – வில் ஸ்மித் (திரைப்படம் – கிங் ரிச்சர்ட்)

சிறந்த நடிகை – ஜெசிகா சாஸ்டெய்ன் (திரைப்படம் – தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே)

ஆவணப்படம்: “சம்மர் ஆப் சோல்” (அல்லது, வென் தி ரிவொலியுசன் குட் நாட் பி டெலிவைஸ்ட்)

பாடல்: “நோ டைம் டு டை” “நோ டைம் டு டை”, (இசை மற்றும் பாடல் வரிகள் பில்லி எலிஷ் மற்றும் ஃபின்னியாஸ் ஓ’கானல்)

சிறந்த இயக்குனர் – ஜென் ஷாம்பியன் (திரைப்படம் – தி பவர் ஆஃப் டாக்)

சிறந்த துணை நடிகர் – டிராய் காஸ்டர் (திரைப்படம் – கோடா)

சிறந்த சர்வதேச திரைப்படம் – டிரைவ் மை கார்

ஆடை வடிவமைப்பு: “க்ருயெல்லா”

.சிறந்த திரைக்கதை – சர் கென்னித் ப்ரானா (திரைப்படம் – பில்ஃபெஸ்ட்)

சிறந்த தழுவல் திரைக்கதை – சியான் ஹேதர் (திரைப்படம்- கோடா)

சிறந்த துணை நடிகை – ஹரியானா டிபோஸ் (திரைப்படம் – வெஸ்ட் சைட் ஸ்டோரி)

ஒளிப்பதிவு – “டூன்”

விஷுவல் எஃபெக்ட்ஸ் – “டூன்”

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – என்காண்டோ

ஒலி – “டூன்”

ஆவணப்படம் (குறுகிய பொருள்) – “தி குயின் ஆப் பாஸ்கட்பால்”

சிறந்த அனிமேஷன் குறும்படம் – “தி விண்ட்ஷீல்ட் வைப்பர்”

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் – “தி லாங் குட்பை”

இசை (அசல் ஸ்கோர்) – “டூன்”

சிறந்த படத்தொகுப்பு – ஜோ வாக்கர் (திரைப்படம் – டூன்)

தயாரிப்பு வடிவமைப்பு – “டூன்”

ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – “தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே”

Full list of 2022 Oscar winners
Full list of 2022 Oscar winners