Tamilstar
Movie Reviews

கேம் சேஞ்சர் திரை விமர்சனம்

Game Changer Movie Review

கல்லூரி மாணவனாக இருக்கிறார் கதாநாயகன் ராம் சரண். சமூதாயத்தில் ஏதேனும் தப்பு நடந்தால் அதை தட்டிக் கேட்கும் குணம் உடையவரி. இதனால் கல்லூரியில் இவரால் நிறைய பிரச்சனைகள் உருவாகுகின்றன. கல்லூரியில் படிக்கும் நாயகி கியாரா அத்வானியை பார்த்து காதலில் விழுகிறார் ராம் சரண். ஆனால் கியாரா அத்வானி ராம் சரணின் முன் கோப குணத்தை மாற்று என்கிறாள். ராம் சரணும் காதலுக்காக தன்னுடைய கோபமான குணத்தை குறைத்துக் கொள்ள முயற்சிக்கிறார். பின் சமூதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என IAS மற்றும் IPS தேர்வுகளுக்கு படிக்கிறார். நாயகி கியாரா அத்வானி கண்டிப்பாக நீ IAS தான் ஆக வேண்டும் IPS ஆனால் உன்னுடைய கோபம் இன்னும் அதிகமாகிவிடும். அப்படி IPS ஆனால் உன முகத்துலையே முழிக்க மாட்டேன் என கூறிவிடுகிறார். ஆனால் ராம் சரண் தேர்வில் வெற்றிப்பெற்று IPS அதிகாரியாகிவிடுகிறார். தான் சொன்னதை கேட்காதலால் கியாரா அத்வானி ராம் சரணை விட்டு பிரிகிறார். IPS அதிகாரியாக சமூதாயத்திற்கு முடிந்த அளவுக்கு மாற்றத்தையும் உதவிகளையும் செய்து வருகிறார்.

மறுபக்கம் ஸ்ரீகாந்த் முதலமைச்சர் பதவியில் இருக்கிறார். இவருக்கு எஸ்.ஜே சூர்யா மற்றும் ஜெயராம் இரு மகன்கள் உள்ளனர். ஸ்ரீகாந்த் இறந்த பிறகு முதலமைச்சர் பதவியில் உட்காருவதற்காக காத்துக் கொண்டு இருக்கிறார் எஸ்ஜே சூர்யா. இப்படி இருக்கும் சூழ்நிலையில் ஒரு பொது கூட்டத்தில் நடிகை அஞ்சலி மற்றும் ராம் சரணை பார்க்கிறார் ஸ்ரீகாந்த். அவர்களை பார்த்தப்பிறகு இவருக்குள் ஏதோ ஒரு நெறுடல் ஏற்படுகிறது. ஸ்ரீகாந்திற்கும் அஞ்சலிக்கும் என்ன தொடர்பு? ஸ்ரீகாந்திர்க்கும் ராம் சரணுக்கும் என்ன சம்மந்தம்? எஸ் ஜே சூர்யாவின் கனவு நிறைவேறியதா? கியாரா அத்வானியுடன் மீண்டும் சேர்ந்தாரா ராம் சரண்? என்பதே படத்தின் மீதிக்கதை.

ராம் சரண் இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். இளமையான தோற்றத்திலும், முதுமையான தோற்றத்திலும் வித்தியாசம் காண்பித்து பார்வையாளர்களை கட்டி போடுகிறார். கியாரா அத்வானி அழகின் உச்சமாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எஸ்.ஜே சூர்யா வழக்கம் போல் வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார். அஞ்சலி அவரது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு IAS அதிகாரிக்கும் முதலமைச்சருக்கும் இடையே உள்ள அதிகாரப்போட்டியை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார். ஷங்கர் வழக்கம் போல் பார்க்க பிரம்மாண்டமான ஒரு படைப்பை உருவாக்கியுள்ளார். அவர் இயக்கிய முந்தைய படங்களான முதல்வன், சிவாஜி படங்களின் சாயல் ஆங்காங்கே வந்து செல்கிறது. படத்தின் காட்சிகளுக்கு கொடுத்த பிரம்மாண்டத்தையும் மெனக்கெடல்களையும் கதைக்கும் சிறிது கொடுத்திருக்கலாம். திரைக்கதை வேகமாக இருந்தாலும் கதை இல்லாததால் அது தோல்வி அடைகிறது. ஒரு கட்டதிற்கு மேல் கதை இப்படித்தான் நகரப்போகிறது என யூகிக்கும்படி கதையமைந்தது பலவீனம். 90& 20 களில் இருந்த ஷங்கரை தற்பொழுது பார்வையாளர்கள் மிஸ் செய்கின்றனர்.

தமனின் பாடல்கள் கேட்கும் ரகம் பின்னணி இசை பெரிதாக கவரவில்லை.

திருநாவுக்கரசில் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்

ராஜு, ஷிரிஷ், எஸ்விசி மற்றும் ஆதித்யாராம் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்”,

Game Changer Movie Review