தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். தொடர்ந்து இருபது ஹிட் படங்களை கொடுத்த ஒரே தமிழ் நடிகராக இன்று வரை விளங்கி வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகி ஆயிரம் நாட்கள் திரையரங்குகளில் ஓடி மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் தான் கரகாட்டக்காரன். இந்த படத்தை கங்கை அமரன் இயக்கியிருந்தார்.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாக அவர் சொல்லி வந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ராமராஜன் தற்போது சாமானியன் என்ற படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.
இப்படியான நிலையில் கங்கை அமரனிடம் கரகாட்டக்காரன் 2 குறித்து பிரபல பத்திரிக்கை நிறுவனம் கேள்வி எழுப்ப அதற்கு அவர் அதிர்ச்சி பதில் அளித்துள்ளார். படத்தின் கதை எல்லாம் ரெடியாகிவிட்டது. கீர்த்தி சுரேஷ் ராமராஜன் பெண்ணாகவும் விஜய் சேதுபதி பக்கத்து ஊர் டான்ஸராகவும் நடிக்க இருந்தார். ஆனால் ராமராஜன் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என சொல்லி விட்டதால் இந்த திட்டத்தையே கைவிட்டு விட்டோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் சாமானியன் படத்தின் டீசர் பார்த்தேன். ரொம்ப நல்லா இருக்கு ராமராஜனுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.