தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக பயணத்தை தொடங்கி இன்று ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார் சூரி. இவரது நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் கருடன்.
சூரியுடன் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். நேற்று வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படம் முதல் நாளில் ரூபாய் 4 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விடுதலை படத்தைப் போல சூரியின் இந்த படத்திற்கும் நல்ல ஓப்பனிங் கிடைத்திருப்பதாக திரையுலக வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.