Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இன்று நடந்த கௌதம் கார்த்திக் மஞ்சுமா மோகன் திருமணம். வைரலாகும் புகைப்படம்

gautam-karthik-manjuma-mohan-marriage-photo

சினிமாவில் ரீல் பேராக நடிக்கும் நடிகர், நடிகைகள் இடையே காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டு பிரபல தம்பதியாக மாறி இருக்கும் நிகழ்வு ஏராளமாக நடந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் புது காதல் ஜோடியாக இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வந்த நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சுமா மோகன் இருவரும் அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளனர்.

தேவராட்டம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்த இவர்களுக்கிடையே காதல் மலர்ந்துள்ளது. அதில் நடிகர் கௌதம் கார்த்திக் தனது காதலை மஞ்சுமா மோகனிடம் முதலில் தெரிவிக்க இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது காதலை ஏற்றுக் கொண்டார் மஞ்சுமா மோகன். சுமார் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி இரு வீட்டார் சம்மதத்துடன் இன்று கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களது இந்த அழகான திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

gautam-karthik-manjuma-mohan-marriage-photo
gautam-karthik-manjuma-mohan-marriage-photo