கவுதம் மேனன் இயக்கிய முதல் படம் மின்னலே. இப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியடைந்ததை அடுத்து இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தவர் தியா மிர்சா.
இவர் கடந்த 2014-ம் ஆண்டு சாஹில் சங்கா என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்நிலையில், 40 வயதாகும் நடிகை தியா 2-வது திருமணம் செய்துள்ளார். மும்பையை சேர்ந்த தொழிலதிபர் வைபவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் குடும்பத்தினர் முன்னிலையில் எளிய முறையில் நடந்தது.
சமூக வலைதளத்தில் திருமண புகைப்படத்தை பகிர்ந்துள்ள தியாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.