Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முதன்முறையாக வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் கவுதம் மேனன்

Gautham Menon is making his acting debut in Vetrimaran

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது.

இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குனர் என்றழைக்கப்படும் கவுதம் மேனன், வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு அற்ற சத்தியமங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.