Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

யோகன் அத்தியாயம் ஒன்று நிறைவேறும் என்று நினைக்கிறேன் : கௌதம் மேனன்

gautham menon speech about thalapathy vijay

“லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் லியோ படக்குழு, தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த வகையில் லியோ வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் கவுதம் மேனன், “நானும் விஜயும் யோகன் அத்தியாயம் ஒன்று படத்தில் இணைய வேண்டியது… முடியாமல் போனது. தற்போது லியோவில் இணைந்து இருக்கிறோம். யோகன் அத்தியாயம் ஒன்று உருவாகும் என்று நினைக்கிறேன். தளபதி am Waiting,” என்று தெரிவித்தார்.”,

gautham menon speech about thalapathy vijay
gautham menon speech about thalapathy vijay