தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை மூன்று சிற்பங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அக்டோபர் நான்காம் தேதி முதல் நான்காவது சீசன் தொடங்குகிறது.
இந்த நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், நடிகை கிரண், ரேகா, கேப்ரில்லா, சம்யுக்தா, விஜே அர்ச்சனா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். ஆண்களில் ரியோ ராஜ், நடிகர் சுரேஷ், அனுமோகன், சூப்பர் சிங்கர் ஆஜித், நடிகர் ஆரி, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும் இன்னொரு ரகசிய போட்டியாளராக லட்சுமி மேனனை களம் இருக்கலாம் என பிக்பாஸ் டீம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இதனால் பிக்பாஸ் இவருக்கு பதிலாக நடிகை காயத்ரியை பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. காயத்ரி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்று படத்தின் மூலமாக மிகவும் பிரபலமானார்.
அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் விஜய் சேதுபதி நடித்த பெரும்பாலான படங்களில் தலைகாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்கூட கிளாமர் புகைப்படத்தின் மூலமாக அனைவரையும் கவர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.