தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வரும் 13ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த ட்ரைலரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஒரு மாலை ஐஜாக் செய்வது போலவும் அவர்களிடமிருந்து விஜய் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பது போலவும் இந்த படத்தின் கதைக்களம் அமைந்து இருப்பது இந்த ட்ரைலர் மூலம் தெரியவந்தது.
முஸ்லிம்கள் ரமலான் நோன்பு இருக்கும் இந்த நேரத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது போல பீஸ்ட் படத்தின் கதைக்களன் இருக்கிறது, இந்த நேரத்தில் இந்த படம் வெளியானால் அது முஸ்லிம்களுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தும் ஆகவே படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி கூறி வருகிறது.
இப்படியான நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் தீவிரவாதிகளுக்கு எதிரானது. முஸ்லிம்களுக்கு எதிரானது இல்லை. அப்படி இருக்கையில் ஏன் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
காயத்ரி ரகுராம் இந்த பதிவு விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. குவைத் நாட்டில் உள்ள படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்ட காரணத்தினால் காயத்ரி ரகுராம் இவ்வாறு ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Beast against terrorist, not against Muslims.
Why ban ? pic.twitter.com/0PKJgGmsjq— Gayathri Raguramm 🇮🇳🚩 (@BJP_Gayathri_R) April 5, 2022