Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தொடங்கியது ஜென்டில்மேன் 2 படத்தின் படப்பிடிப்பு..வைரலாகும் தகவல்

gentleman-2-movie latest update

இயக்குனர் கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜென்டில்மேன்-2’. இப்படத்தை கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கிறார். இப்படத்தில் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா சக்ரவர்த்தி நடிக்கிறார். கீரவாணி இசையமைக்கும் இப்படத்திற்கு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 9) சத்யா ஸ்டுடியோவில் துவங்கியது. தமிழக தகவல் ஒளிபரப்பு மற்றும் செய்தித்துறை அமைச்சர் எம்.பி.சாமிநாதன் ஸ்விட்ச் ஆன் செய்ய, எம்.ஜி.ஆர்-ஜானகி காலேஜ் மற்றும் சத்யா ஸ்டுடியோ தலைவர் டாக்டர்.குமார் ராஜேந்திரன் கிளாப் அடிக்க, வைரமுத்து ஆக்ஷன் சொல்ல படபிடிப்பு ஆரம்பமானது.

முதல் காட்சியில், நாயகன் சேத்தன், நாயகி நயந்தாரா சக்ரவர்த்தி பங்கு பெற்றனர்.படப்பிடிப்பு குறித்து தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பேசியதாவது, \”எனது ஆரம்ப காலகட்டங்களில் எம்.ஜி.ஆர் நடித்த பல படங்கள் மற்றும் சத்யா மூவீஸின் பல படங்களை நான் விநியோகம் செய்துள்ளேன். என் வாழ்க்கையின் உயர்வுக்கு முக்கிய பங்களித்த இந்த சத்யா ஸ்டியோவில் ஜெண்டில்மேன்-2 படப்பிடிப்பு துவங்கியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்..\” என்றார். மேலும், படக்குழு தொடர்ந்து சென்னையிலேயே 25 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.”,.

gentleman-2-movie latest update
gentleman-2-movie latest update