தென்னிந்திய திரை உலகில் அல்டிமேட் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் தல அஜித் குமார் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் துணிவு திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளரான ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் துணிவு படத்திற்கான பணியில் ஈடுபட்டு வரும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
அப்பதிவில் அவர், புகைப்படத்துடன் இணைத்து ‘Working’ என்று பதிவிட்டு இருக்கிறார். இப்படத்தில் முதல் பாடலான சில்லா சில்லா பாடல் அடுத்த வாரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது அதற்கான தீவிரமான வேலையில் தான் ஜிப்ரான் இறங்கி இருப்பதாக அப்பதிவின் மூலம் தெரியவந்துள்ளது.
Working !!! pic.twitter.com/9ey83uGUxw
— Ghibran (@GhibranOfficial) November 17, 2022