நடிகர் கார்த்தியின் நடிப்பில் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாகி மாபெரும் ஹிட் அடித்து இருக்கும் திரைப்படம் தான் “சர்தார்”. இப்படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டே நடிக்க ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் 60 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. இதனால் சர்தார் திரைப்படத்தின் படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை இயக்கிய பி எஸ் மித்ரன் அவர்களுக்கு சர்தார் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண்குமார் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். டோயோட்டா பார்ச்சுனர் எஸ்யூவி என்ற அந்த சொகுசு காரை மித்ரனுக்கு நடிகர் கார்த்தி வழங்கினார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
