Tamilstar
Health

கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் இஞ்சி..

Ginger helps in lowering cholesterol

நம் வீட்டில் அதிக எண்ணையை பயன்படுத்தி சமைத்த உணவுகளை உண்ணும்பொழுது கொலஸ்ட்ரால் அதிகமாகும். இதனை இஞ்சி பதப்படுத்தி கொலஸ்ட்ராலை எப்படி குறைக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க.

முதலில் இஞ்சி ஒரு துண்டை எடுத்துக் கொண்ட ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து ஆறிய பிறகு வடிகட்டி குடித்து வர வேண்டும்.

இரண்டாவதாக இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்கவிட்டு குடித்து வந்தால் எண்ணெயில் சமைக்கும் போதோ சாப்பிடும் போதே இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும்.

இதுமட்டுமில்லாமல் இஞ்சியை நேரடியாக என்று பச்சையாக சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் இன்னும் வேகமாக குறைவதை உணரலாம்.

இன்னும் எளிமையான முறையில் இஞ்சியை பொடியாக அரைத்து வைத்துக்கொண்டு தண்ணீரிலோ அல்லது நாம் உண்ணும் உணவில் கலந்து சாப்பிட்டு வரலாம். இந்தப் பொடியை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

இப்படி நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் இஞ்சியை பயன்படுத்தி நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம்.