இஞ்சி சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரால் பிரச்சனையை தீர்க்க முடியும்.
கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது நம் உடலுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால் உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் பக்கவாதம் மாரடைப்பு போன்ற நோய்கள் வரக்கூடும்.
நாம் இஞ்சியை பச்சையாக சாப்பிட்டால் நமக்கு மிகவும் நன்மையையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.
எண்ணெயால் ஏற்படும் கொலஸ்ட்ரால் அபாயத்தை குறைக்க இது பெருமளவில் உதவுகிறது.
மேலும் இஞ்சியை நன்றாக வெயிலில் காய வைத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரில் கலந்து குடித்தால் உடல் எடையை குறைக்க சிறந்த வழியாகும்.
இதனைத் தொடர்ந்து இஞ்சியை ஒரு கிளாஸ் வெந்நீரில் 15 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த தண்ணீரை குடித்தால் நமக்கு பல வகையான நன்மைகளை கொடுக்கும்.
பொதுவாக நாம் பால் மற்றும் டீயில் இஞ்சியை சேர்த்து குடிப்பது வழக்கம். ஆனால் தேநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்