Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கொரோனா ஊரடங்கு எதிரொலி… எளிய முறையில் நடந்த ‘பிகில்’ பட ஒளிப்பதிவாளர் திருமணம்

GK Vishnu Weds Mahalakshmi

விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான மெர்சல், பிகில் மற்றும் தெலுங்கில் ரவிதேஜா, சுருதிஹாசன் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற கிராக் போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஜி.கே.விஷ்ணு. இவருக்கும் மஹாலட்சுமி என்பவருக்கும் இன்று காலை சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோயிலில் திருமணம் நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி மிக எளிய முறையில் நடைபெற்ற இத்திருமணத்தில், மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர், மிக முக்கிய சொந்தங்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

நடிகைகள் வரலட்சுமி சரத்குமார், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர். மேலும் ரசிகர்களும், பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.