தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் இவர் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை உருவாக்கி அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் தளபதி விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வரும் நிலையில் மேலும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு நடிப்பிற்கு முழுக்கு போட உள்ளார்.
இந்த நிலையில் சமீப காலமாக விஜயின் நடவடிக்கைகளை பார்க்கும்போது அவர் அஜித் ரூட்டுக்கு மாறியதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதாவது வியாழக்கிழமையான இன்று படத்தில் ரிலீஸ் தேதிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதேபோல் செப்டம்பர் ஐந்தாம் தேதியும் வியாழக்கிழமை தான். மேலும் தளபதி விஜய் சமீபத்தில் சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்திருந்தார். இதுகுறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியிருந்தது.
பொதுவாக அஜித்தின் படங்களின் அப்டேட் அறிவிப்பு ரிலீஸ் தேதி போன்றவை தான் வியாழக்கிழமை வரும். தற்போது விஜயும் அதே பாணியை கையில் எடுத்து இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.