Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காட் ஃபாதர் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.. தீயாக பரவும் தகவல்

god father movie first day collection update

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘லூசிபர்’. இப்படத்தை தெலுங்கில் காட் ஃபாதர் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடித்துள்ளார். சிரஞ்சீவி – நயன்தாரா தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கான காட் ஃபாதர் படத்தை இயக்கியுள்ளார்.

மோகன் ராஜா – சிரஞ்சீவி இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாராவும், முக்கிய கதாப்பாத்திரத்தில் சல்மான் கானும் நடித்துள்ளனர். ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ மற்றும் ‘என்.வி.ஆர் ஃபிலிம்ஸ்’ இணைந்து இப்படத்தை தயாரித்திருந்த இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.காட் ஃபாதர் வசூல் அறிவிப்பு இந்நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காட் ஃபாதர் திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.38 கோடிக்கு மேல் வசூலாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.