Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

God Of Love : அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து..!

god of love movie shooting update

சிம்பு நடிக்கப் போகும் God Of Love படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் அஸ்வத் மாரிமுத்து.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.இவர் நடிப்பு மட்டுமில்லாமல் இயக்குனர், பின்னணி பாடகர் என பன்முக திறமைகளை கொண்டு தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வருகிறார்.

இவரது நடிப்பில் தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் உருவாக ரெடியாக இருக்கிறது. அதாவது முதலில் பார்க்கிங் பட இயக்குனருடன் சிம்பு 49 படத்தில் நடிக்க உள்ளார். மேலும் சிம்பு 50 படத்தை அவரே சொந்தமாக தயாரிக்கவும் இருக்கிறார்.

அதன் பிறகு எஸ்.டி.ஆர் 51 திரைப்படமான காட் ஆப் லவ் படத்தை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என்றும் அடுத்த வருடத்தில் இந்த திரைப்படம் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

god of love movie shooting update