தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தலை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.
இதனைத் தொடர்ந்து கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள கொரானா குமாரு என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இப்படியான நிலையில் மாநாடு வெற்றியால் நடிகர் சிம்பு தன்னுடைய சம்பளத்தை 30 கோடியாக உயர்த்தினார். இதனால் அவருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் இந்த படம் கைவிடப்பட்டு விட்டதாக தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில் தற்போது இதுகுறித்து இயக்குனர் கோகுல் விளக்கம் அளித்துள்ளார். படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவல் முழுக்க முழுக்க வதந்தி. படத்தை கைவிடும் திட்டமும் தள்ளி போடும் திட்டமும் இல்லை. சிம்பு தற்போது நடித்து வரும் வெந்து தணிந்தது காடு மற்றும் காட்டு தல உள்ளிட்ட படம் சூட்டிங் முடிவடைந்ததும் இந்த படத்தின் சூட்டிங் தொடங்கும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என தெரிவித்துள்ளார்.