Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குட் பேட் அக்லி படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா?வைரலாகும் சூப்பர் தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இதைத்தொடர்ந்து அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகிய வெற்றி பெற்ற குண்டூர் காரம் படத்தின் நாயகியான ஸ்ரீ லீலா நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Good bad ugly movie heroine update viral
Good bad ugly movie heroine update viral