தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
படத்தின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து இதுவரை இந்த படம் பற்றிய அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருந்து வந்த நேரத்தில் அஜித்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானது.
குட் பேட் அக்லி என்ற பெயரில் உருவாக உள்ள அஜித்தின் 63 வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். மேலும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார்.
படத்தின் டைட்டிலுக்கு ஏற்றவாறு இந்த படத்தில் அஜித் மொத்தம் மூன்று வேடங்களில் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. 16 வருடங்களுக்குப் பிறகு இந்த மேஜிக் நடைபெற இருப்பது அஜித் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு முன்னதாக கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான வரலாறு படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.