கல்லீரல் பிரச்சனைக்கு நெல்லிக்காய் எவ்வாறு உதவுகிறது என்று தெளிவாக பார்க்கலாம்.
கல்லீரல் பிரச்சனை என்பது மிகவும் ஆபத்தானது. கல்லீரல் நம் உடலில் நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. கல்லீரலில் ஏதேனும் பிரச்சனை வந்தால் அது உடல் முழுவதையும் பாதிக்கும். ஏனெனில் செரிமானம் தொற்று நோய் எதிர்ப்பு போராடுதல் நச்சுக்களை வெளியேற்றதால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் போன்ற வேலைகளை செய்வது கல்லீரல் தான்.
அப்படிப்பட்ட கல்லீரலுக்கு எந்த வித பிரச்சனையும் வராமல் நாம் பாதுகாக்க வேண்டும்.
நமக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டால் நாம் வைட்டமின் சி அதிகமாக உள்ள நெல்லிக்காய் சாப்பிட்டால் நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். ஏனெனில் கல்லீரல் பிரச்சனையில் இருந்து நம்மை காக்கவும் கல்லீரல் பலவீனத்தை எதிர்த்தோம் போராடும். இது கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பெருமளவில் உதவுகிறது.
நெல்லிக்காயை காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் ஆகவோ அல்லது நேரடியாகவோ மென்று சாப்பிடலாம். கல்லீரல் பிரச்சனை இருப்பவர்கள் கருப்பு உப்பு சேர்த்து சாப்பிடுவது சிறந்தது. இப்படி தொடர்ந்து சாப்பிட்டால் சில நாட்களில் நாம் பலனை எதிர்பார்க்கலாம்.
நெல்லிக்காயை ஜூஸ் ஆக செய்து குடிப்பது எப்படி என்று பார்க்கலாம்?
முதலில் நெல்லிக்காய்களை எடுத்து நன்றாக கழுவி கொட்டையை நீக்க வேண்டும்.
பிறகு மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு இஞ்சி மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். அரைத்ததை வடிகட்டி சிறிதளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வர வேண்டும். இது மட்டும் இல்லாமல் ஜூசை மோரிலும் கலந்து குடிக்கலாம்.
இப்படி கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம்.