Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கோபிகா.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கோபிகா. சேரனின் நடிப்பு மற்றும் இயக்கத்தின் வெளியான ஆட்டோகிராப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் இதற்கு முன்பாகவே மலையாள சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.

ஆட்டோகிராப் படத்தை தொடர்ந்து தமிழில் நிறைய படங்களில் நடித்து வந்த கோபிகா அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட தொடங்கினார்.

இவருக்கு இரண்டு மகள்கள் பிறந்து தற்போது இருவரும் வளர்ந்து விட்ட நிலையில் தனது மகள்களுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதுல கோபிகா யாரு என தேடும் அளவிற்கு தன்னுடைய உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக இளமையாக மாறி உள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

Gopika latest photos viral
Gopika latest photos viral