பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்க்கிங்’ படத்தில் நடித்துள்ளார். திரில்லர் ட்ராமாவான ‘பார்க்கிங்’ திரைப்படத்தை ‘பலூன்’ பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ‘பார்க்கிங்’ படம் பார்த்துள்ள நடிகர் கவுதம் கார்த்திக் படக்குழுவை பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “நேற்று ‘பார்க்கிங்’ படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையாக நான் மிகவும் படத்தை ரசித்தேன். ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பு சிறப்பாக இருந்தது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
Had the opportunity to watch #Parking movie yesterday, and I thoroughly enjoyed it!
Well done to director @ImRamkumar_B for creating and executing such a wholesome entertainer.@iamharishkalyan bro and #MSBhaskar sir rocked their performances.
Congrats to the entire team for…— Gautham Karthik (@Gautham_Karthik) November 30, 2023