Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

GP முத்து நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் இதோ

gp-muthu-as-transgender getup in new movie

டிக்டாக் மூலம் பிரபலம் அடைந்தவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜி.பி.முத்து தனது யதார்த்த பேச்சின் மூலம் மிக பிரபலம் அடைந்தார். நாளுக்கு நாள் இவரின் பாலோவர்கள் எண்ணிக்கை அதிகரித்து பல லட்சங்களை தாண்டியது. இதையொட்டி புகழின் உச்சிக்கு சென்ற ஜி.பி.முத்து சினிமாவில் அறிமுகமாகி நடிக்க தொடங்கினார். தனியார் நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள், சின்னத்திரை நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலங்களில் ஒருவராக வலம் வர தொடங்கினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவரது புகழ் மேலும் அதிகரித்து சினிமா வாய்ப்புகள் வரிசையாக வரத்தொடங்கின. அந்த வகையில் இப்போது அவர் ‘ஆர்வன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜி.பி.முத்து திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரை ஜி.பி.முத்து தனது வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.”,

gp-muthu-as-transgender getup in new movie
gp-muthu-as-transgender getup in new movie