தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் முதல் வார எலிமினேஷன் இன்று நடைபெற உள்ளது.
சாந்தி குறைவான ஓட்டுக்களை பெற்று இருப்பதாக தகவல் வெளியான நிலையில் ஜிபி முத்து தானாக வெளியேறுவதாக முடிவு எடுத்தார். பிக் பாஸ் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்திய அவர் வெளியேறுவதாக கூறிய நிலையில் அதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
ஜிபி முத்துவின் மகன் விஷ்ணு ஒருவாரம் அப்பாவை பார்க்காததால் உடல் நலக் குறைபாடு ஏற்பட்ட நிலையில் பிக் பாஸ் ஜிபி முத்துவை வெளியேற்றியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி இனிமேல் போர் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.