சமூக வலைத்தளம் மூலம் பிரபல நகைச்சுவையாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜிபி முத்து. கிராமத்து பாஷையில் வெள்ளந்தியாக நடந்து கொள்ளும் ஜிபி முத்து சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். ஆனால் குழந்தைகள் மீது உள்ள பாசத்தால் பாதியிலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஜிபி முத்து தற்போது சன்னி லியோன் மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தில் காமெடியனாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில் நேற்று இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்று உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஜிபி முத்துவின் கலகலப்பான பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், சன்னிலியோன் என்றால் யார் என்றே எனக்கு தெரியாது என்று கூறினார்.
மேலும் நான் இதுவரை டிக் டாக் மற்றும் குறும்படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். நான் நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான் இந்த திரைப்படத்தை நன்றாக ஓடச்செய்து எனக்கு ஆதரவளிக்க வேண்டும். கேரக்டரின் பெயரை கேட்டாலே சிரிப்பு வரும் என்று அவர் பாணியிலே பேசிய விதம் பலரையும் சிரிக்க வைத்துள்ளது.