தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கடைதான் தி நகரில் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் புதிய கிளையாக உருவெடுத்துள்ளது.
7 அடுக்கு தளங்களைக் கொண்ட இந்த வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக ஒரே கடையில் கிடைக்கிறது.
இதனால் இது திரையுலக பிரபலங்களின் ஃபேவரைட் கடையாக மாறியுள்ளது. ஏற்கனவே எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது டிக் டாக் பிரபலமான ஜி பி முத்து தொகுப்பாளர் வைரம் உடன் இணைந்து இந்த கடையில் இரண்டாவது முறையாக ஷாப்பிங் செய்துள்ளார். அப்போது தளபதியின் பீஸ்ட் படத்தில் இருந்து வெளியான அரபிக் குத்து பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் ஜிபி முத்து புடவை சக்ஷனுக்கு சென்று புடவை அணிந்து அழகு பார்த்துள்ளார். இதுபோல எக்கச்சக்கமான விஷயங்களை செய்துள்ளார். இந்த செம Fun- ஆன வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.