உடல் எடையை குறைக்க பச்சை மிளகாய் உதவுகிறது.
இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைக்க பல்வேறு டயட்டுகளும் உடற்பயிற்சிகளும் செய்வார்கள். குறிப்பாக உணவு சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.
இருப்பினும் பச்சை மிளகாய் குழம்பு உடல் எடையை குறைக்க முடியுமா?ஆம் ஏனெனில் இதில் வைட்டமின் பி6, வைட்டமின் ஏ ,இரும்பு, பொட்டாசியம் ,தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இது உடல் எடையை குறைக்க வழி வகுக்கும்.
மேலும் இது வளர்ச்சியை மாற்றத்தை அதிகரித்து பசியை குறைப்பதால் உடலில் இருக்கும் கலோரிகள் குறைகிறது. ஆனால் அதிகமாக சாப்பிடும் போது வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் வர வாய்ப்புள்ளது.
உடல் எடை குறைவது மட்டுமே இல்லாமல் இதய நோய் மற்றும் புற்றுநோய் வருவதிலிருந்து தடுக்கலாம். இதில் வைட்டமின் சி இருப்பதால் சருமப்பொளிவிற்கு முகச்சுருக்கத்தை நீக்கவும் உதவுகிறது.
பச்சை மிளகாய் ஆரோக்கியத்திற்கு உதவினாலும் அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதை உணர்ந்து எந்த ஒரு உணவையும் அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது.