உடல் எடையை குறைக்க கொய்யா இலை பயன்படுத்தலாம்.
பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று கொய்யா. இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்துள்ளது.
ஆனால் கொய்யா இலைகளில் இருக்கும் சத்துக்கள் குறித்து நீங்கள் அறிந்து உள்ளீர்களா. ஆம் அதில் கார்போஹைட்ரேட் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் கால்சியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. கொய்யா இலையில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் உடல் எடை இழப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
கொய்யா இலையில் டீ குடிப்பதன் மூலம் செரிமான பிரச்சனையை தடுப்பது மட்டுமில்லாமல் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி நல்ல கொழுப்புகளை பாதுகாக்க உதவுகிறது.
மேலும் கொய்யா இலை கசாயம் இருமல் தொண்டை பிரச்சனை இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் குடிக்கலாம். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் கொய்யா இலைகளை காய வைத்து அதில் கசாயம் செய்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.