Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூரரைப் போற்று டிரைலர் குறித்த அறிவிப்பை வெளியிட்ட பிரபலம் – விரைவில் வெறித்தனமான கொண்டாட்டம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று.

சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நதி பால முரளி நடித்துள்ள இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

மேலும் இப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வெளியாக வெளியாக உள்ளது. விரைவில் இந்த படத்தின் டிரைலர் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் சூரரைப் போற்று ட்ரெய்லருக்கான பிஜிஎம் வேலைகள் முடிந்து விட்டதாகவும் விரைவில் இப்படத்தின் டிரைலர் வெளியாகும் எனவும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் சூர்யா ரசிகர்களுக்கு விரைவில் பெரிய கொண்டாட்டம் காத்துக் கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது.