Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித்துக்கு ஸ்டோரி ரெடி.. இயக்குனர் யார் தெரியுமா? பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்

GV Prakash About Sudha Kongara and Ajith Combo

தமிழ் சினிமாவில் நடிகர் இசையமைப்பாளர் என பன்முகத் திறமைகளோடு வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவரது நடிப்பில் பல படங்கள் ரிலீசுக்கு காத்து கொண்டிருப்பது போல இவரது இசையில் பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

தற்போது ஜிவி பிரகாஷ் ரசிகர்களுடன் லைவ் சேட்டில் உரையாடியபோது அஜித் மற்றும் சுதா கொங்கரா கூட்டணி பற்றி பேசியுள்ளார். ரசிகர் கேட்ட கேள்விக்கு இவர்களின் கூட்டணி உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. அஜித்துக்காக செம ஸ்டோரியை வைத்துள்ளார் சுதா கொங்கரா.

ஒருவேளை எல்லாம் அமைந்து இந்த கூட்டணி உருவானால் அது நிச்சயம் வேற லெவல் ஆக இருக்கும் என கூறியுள்ளார். இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து அஜித், சுதா கொங்கரா கூட்டணிக்கான காத்துக் கொண்டிருப்பதாக கூறி வருகின்றனர்.