தமிழ் சினிமாவில் நடிகராக இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ்.
இவர் தன்னுடைய தோழியும் பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்தநிலையில் கடந்த மாதம் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறி குழந்தைக்கு பெயர் என்ன என கேட்டு வந்தனர்.
ஆனால் தன்னுடைய குழந்தையின் பெயர் குறித்து இதுவரை ஜிவி பிரகாஷ், சைந்தவி ஆகியோர் வாய் திறக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது பிரபலமான கணேஷ் வெங்கட்ராமன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார்.
அதில் ஜிவி பிரகாஷின் மகளுக்கு அவ்னி என பெயர் வைத்திருப்பதாக கூறியுள்ளார்.