காதல் பாடல்களால் நம் மனங்களை தன் விரல் இசையால் கட்டிப்போட்டவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது முழு நேர நடிகராகவே மாறிவிட்டார். 50 படங்களையும் கடந்து இசையமைத்து வருகிறார்.
அவரின் இசையமைப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் சூரரை போற்று. சூர்யாவின் நடிப்பில் சுதா கே பிரசாத் இயக்கத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் ஒரு பக்கம் விஜய்யின் ரசிகரும் கூட. அவர் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அண்மையில் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
சைந்தவி தற்போது அக்குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.