Tamilstar
Health

உங்களுக்கு மார்பகம் இருக்கிறதா?ஆண்களே!

உடல் அமைப்பில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் மாற்றத்தினால் சில ஆண்களுக்கு பெண்களை போன்று மார்பகம் இருக்கும்.

இந்த பிரச்சனை மூப்ஸ் என அழைக்கப்படுகிறது. இதனால் மனதளவில் ஆண்கள் பெரிதாக பாதிக்கப்படுகின்றன.

பெரும்பாலான ஆண்களுக்கு மார்பகம் தட்டையாகவே இருக்கும். ஒரு சிலருக்கு மட்டுமே இத்தகைய ஹார்மோன் பிரச்சனையானது ஏற்படுகிறது.

இந்த அமைப்பை உடைய ஆண்கள் காலப்போக்கில் மன அதிர்வு நோய்க்கு ஆளாகின்றனர்.

இதனால் மன நலத்தில் மாற்றம் உண்டாகின்றது. மார்பக அமைப்பை வெளிப்படையாக தெரிவதை மறைக்க லூசான ஆடைகள் அணிவதை தேர்ந்தெடுக்கின்றனர்.

இத்தகைய ஆண்கள் ஒவ்வோரு நாளும் காலையில் எழும்போது தங்களின் மார்புப்பகுதி சாதாரண அமைப்பிற்கு மாறிவிடும் என நம்பிக்கை கொள்ளலாம். ஆனால் இது சாத்தியமற்றது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மூப்ஸ் பிரச்சனை உள்ள ஆண்கள் நீச்சல் அடிப்பது, வீட்டில் கூட சட்டை இன்றி இருப்பது போன்ற சாதாரண செயல்களை செய்யக்கூட தயங்குகின்றனர்.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் மூலம் ஒரே நாளில் இந்த பிரச்சனைக்கு தீர்வை கண்டறிந்துவிடலாம் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.