எச்.வினோத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் நான்காவது படம் வலிமை. இதற்கு முன் இவருடைய இயக்கத்தில் உருவான சதுரங்க வேட்டை, தீரன், நேர்கொண்ட பார்வை வெற்றியைடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கும் வலிமை, வரும் ஜனவரி 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் கோடிக்கணக்கில் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது வருகிறது.
இந்த டிரைலரில் அஜித் பேசிய வசங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில், வலிமை படத்தின் கதையை கேட்டு முடித்தவுடன் நடிகர் அஜித் சில கண்டிஷன்களை போட்டாராம்.
அதாவது, வலிமை படத்தில் காவல்துறையில் உள்ள அனைவரும் மோசமானவர்கள் என்பது போன்று சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெறக்கூடாது. அதோடு, அரசியல் குறித்த சர்ச்சையான காட்சிகளோ, தனி மனித தாக்குதலோ இருக்கக்கூடாது என்றும் கண்டிசனாக சொல்லி விட்டாராம் அஜித்.