இளம் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் இரண்டாவது முறையாக நடிக்கும் திரைப்படம் வலிமை. இது வினோத்தின் எழுதிய நிஜ கதையை வைத்து உருவாகியுள்ளது.
படத்திற்கான ஆரம்பம் படு வேகமாக இருந்தாலும் முடிப்பதற்குள் படக்குழு ஏகப்பட்ட சவால்களை சந்தித்து விட்டனர்.
ஒருவழியாக படம் முடிந்து ரிலீஸிற்கு தயாராகி விட்டது, வரும் ஜனவரி 14ம் தேதி படம் பிரம்மாண்டமாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நேரத்தில் தான் வினோத் வலிமை படம் குறித்து ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில், வலிமை கதை வேறொரு நடிகரை மனதில் வைத்து தான் முதலில் எழுதப்பட்டது, அஜித் அவர்கள் இந்த கதையை தேர்வு செய்யவே நிறைய விஷயங்கள் கதையில் மாற்றப்பட்டது.
போலீஸ் என்பதே அஜித் கமிட்டான பிறகு தான் மாற்றப்பட்டது என கூறியுள்ளார்.
எந்த நடிகரை மனதில் வைத்து இந்த கதை எழுதினார் என்பதை அவர் கூறவில்லை.