தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச் வினோத். இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன்.
இந்த படங்களைத் தொடர்ந்து எச் வினோத் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து படத்தை இயக்கப் போவதாக தகவல் பரவியது. இருந்த போதிலும் இதுவரை இது பற்றி எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இப்படியான நிலையில் தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி இருப்பதாகவும் அந்த பணிகள் முடிவடையும் தருவாயில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
வினோத் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் என இருவரும் முதல்முறையாக கூட்டணி அமைப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.