தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா.
விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.
உடல் எடை கூடிய வாய்ப்பு இல்லாமல் போனதும் தன்னுடைய எடையை குறைத்து மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இவரது நடிப்பில் தற்போது மகா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் முன்னாள் காதலரான சிம்புவும் நீண்ட கெஸ்ட் ரோலில் இணைந்து நடித்து வருகிறார்.
இருப்பினும் ஹன்சிகாவிற்கு அடுத்தடுத்து எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அவர் புதிதாக பலூன் பிசினஸ் ஒன்றை தொடங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
எனது பலூன் பிசினஸா என்று ஷாக் ஆகாதீங்க.. இது சாதாரண பலூன் பிசினஸ் இல்ல.
மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிலும், கல்யாண நிகழ்ச்சிகளிலும் அலங்காரம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் பலூன் சார்ந்த பிசினஸ்.
இந்த பிசினஸ் ஆவது நமக்கு சரியாக கைகொடுக்க வேண்டும் என ஹன்சிகா இதனை தொடங்கியுள்ளாராம்.