தனுஷ் நடித்த மாப்பிள்ளை எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
இவர் தற்போது மஹா, பார்ட்னர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இவருக்கு முன்பு இருந்தது போல் தமிழ் திரையுலகில் வரவேற்பு இல்லை என்று தான் கூறவேண்டும்.
இந்நிலையில் நடிகை ஹன்சிகா பிரபல தொழிலதிபர் ஒருவரை இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று புதிதாக சர்ச்சை கிளம்பியது.
இந்த செய்தியை அறிந்த நடிகை ஹன்சிகா ” Rubbish யார் அந்த நபர் ” அப்படி யாரும் கிடையாது என்றும் இது முற்றிலும் வதந்தி என கூறியுள்ளார்.