தமிழில் பிரபல நடிகையாக இருப்பவர் ஹன்சிகா. இவர் நடித்துள்ள 50 வது திரைப்படம் மஹா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில், சிம்பு, ஶ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.
இந்நிலையில் ஹன்சிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘மை நேம் இஸ் ஸ்ருதி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. ஸ்ரீனிவாஸ் ஓம்கர் என்பவர் இயக்கும் இப்படம், ஒரு பெண் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு ஆண் எப்படி பொறுப்பாகிறான் என்பதை மையமாக வைத்து உருவாக்க இருக்கிறார்கள்.