தமிழில் வெளியான மாபிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
ஆனால் இப்படத்தில் நடிப்பதற்கு முன்பே ஹிந்தியில் சில படங்களில் தனது சிறு வயதில் நடித்துள்ளார்.
மேலும் விஜய்யின் வேலாயுதம், சூர்யாவின் சிங்கம் 2 முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
இதன்பின் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு திரையுலகிலும் நடித்து முன்னணி நடிகையாக விளங்கி வந்தார்.
ஆனால் சில வருடங்களாக இவருக்கு தமிழில் மார்கெட் இல்லாமல் போனது. இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே வந்தது.
மேலும் தற்போது மீண்டும் சோலோ ஹீரோயினாக சிம்புவடன் மஹா எனும் படத்திலும் மற்றும் பார்ட்னர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
ஆனால் இவருக்கு முன்பு இருந்தது போல் தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்று தான் கூறவேண்டும்.
இந்நிலையில் தற்போது டாப் ஹீரோவுடன் மீண்டும் கள்மிரங்கி தனக்கான புதிய மார்க்கெட்டை தமிழ் திரையுலகம் உருவாக்க உள்ளார் நடிகை ஹன்சிகா.
ஆம் மித்ரன் ஜவகர் முன்னணி நடிகர் தனுஷை வைத்து இயக்கும் படம் தான் D44. இப்படத்தில் தான் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி என தகவல்கள் வெளியாகி வுள்ளது.