Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பூஜையுடன் தொடங்கியது ஹன்சிகா படத்தின் படப்பிடிப்பு

hanska motwani new movie launch

தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. ‘சின்ன குஷ்பு’ என்று அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், தற்காலிகமாக சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘மஹா’ என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சனம் பெற்ற இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ஆர்.கண்ணன் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஹன்சிகா நடிக்கிறார்.

இப்படத்தில் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிகிடா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றதையடுத்து இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.